என் நண்பர்கள்
அருள் ராவ்
ஏதோ ஒரு தெருமுனையில் பைத்தியமாய் சுற்றி திரிந்த என்னை எழுப்பி வெளிச்சத்திற்க்கு கொண்டு வந்த என் தெய்வம். என் நண்பர் அருள்ராவ் − தீபம் ஜெராக்ஸ் மயிலாடுதுறை.
ம ணி க ண் ட ன்
உமா ஜெராக்ஸ் மயிலாடுதுறை.
அ ன் ப ர ச ன்
என் வாழ்க்கையில் எனக்கென ஒரு முகவரி ஏற்படுத்தி தந்தவர் என் அண்ணன்.எனது நல்ல நண்பரும் கூட.
தோழியே
அன்னை என்னும்
தெய்வம் என்னை
ஆல்கிறது தோழியே
அத்து மீறும்
கடவுளை நான்
அழைப்பதில்லை தோழியே
சொத்துசுகம் தேவையில்லா
சொந்த மண்ணைவிட்டு
வந்துவிட்டேன் தோழியே
சந்தற்ப்ப சூழ்நிலையால்
தவறுகள் ஏதேனும்
நான் செய்திருந்தால்
வாசலில் செருப்பாய்
என்னை விட்டுவிட்டு
செல்வாயோ
நீயூம் விட்டு
சென்று விட்டால்
தாங்கிடுமோ எந்தன்
ஏழை நெஞ்சம்.
தோழமை
என் உயிர் தோழியே
என் உயிர் தோழியே
என்மேல் என்ன
கோபம் உனக்கு
என்னிரெண்டு மாதங்களில்
எந்தன் உள்ளம்
நீ அறிவாய் உந்தன் உள்ளம்
நான் அறிவேன்
பூட்டிய உன் உதடுகளால்
புன்னகையை நான்
தொலைத்தேன் புழுவாய்
தான் துடித்தேன்
விட்டு விட்டு
செல்லாதே அதை
எந்தன் நெஞ்சம்
தான் தாங்காதே
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் என் உயிர்த்தோழியாய்
என்றும் நீ
வேண்டும் எனக்கு
நண்பா
பழகிய விதம்
என் தவறு
அதை பயன்படுத்திய
விதம் உன்தவறு
கனத்த இதயத்தோடு
நகர்கிறேன் உன்னைவிட்டு
உனக்கு தெரியாமலே.
நிராகரிப்பு
அலட்சியப்படுத்தபட்ட
என் அன்பு
இனி அது நிற்க்குமோ
உன் முன்பு.
நான் பழகிய
விதங்களில் ஏதோ
ஒன்று உன்னை
பாதித்திருக்கலாம்
பண்பறியா என்மனதிற்க்கு
ஏனோ புரியாமல்
போனதடி எப்படி
பிரிவது என்று ஏங்கிடாதே
நானே நகர
தொடங்குகிறேன் உன்
நலன் விரும்பி
நான் என்பதால்
மறக்க மனம்
தினறாதே மாலை நேரம்
வந்து விட்டது
மாயமாய் போயிடுவேன் - நான்